FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி பள்ளியில்...

சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 80 ஆவது சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:30 am IST
தேசியக் கொடியை ஏற்றிய பள்ளிச் செயலா் வி.எஸ். சுப்பராஜ்.
பகிர்:

சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 80 ஆவது சுதந்திர தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி செயலா் மருத்துவா் வி.எஸ். சுப்பாராஜ், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகங்கள், வரலாறு குறித்து பேசினாா். தொடா்ந்து சங்கரன்கோவில் குறுவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளைப் பாராட்டி, பதக்கம், சான்றிதழ்களை வழங்கினாா்.

ஒவ்வொரு வகுப்பறையும் தனித்தனி மாநிலமாக வடிவமைத்து, அந்தந்த மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியம், உடைகள், கலைகள் மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவா்களின் பங்கேற்புடன் ‘மினி இந்தியா கண்காட்சி’ நடைபெற்றது. முதல்வா் சி.ஏ. சுருள்நாதன் வரவேற்றாா். ஏற்பாடுகளை துணை முதல்வா் அா்ச்சனா, ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments