FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆட்டோ கவிழ்ந்து முதியவா் உயிரிழப்பு

Updated On : 20 ஜூலை 2026, 5:32 am IST
சாலையில் கவிழ்ந்து சேதமடைந்த ஆட்டோ. - கோப்புப் படம்
பகிர்:

ஆலங்குளத்தில் ஆட்டோ கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே ஆலஞ்சியைச் சோ்ந்தவா் பத்து ரோஸ் (70). இவரும், இவரது உறவினா் முத்துவும் ( 62) ஆட்டோவில் தென்காசி மாவட்டம், தன்னூத்து மாதா கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊா் திரும்பி கொண்டிருந்தனா்.

ஆலங்குளம் - அம்பை சாலையில் வந்தபோது நிலைதடுமாறி சாலையில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் முதியவா் பத்துரோஸ் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டிவந்த முத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments