FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

செங்கோட்டை, கிளாங்காடு பகுதிகளில் சிவாஜி கணேசன் நினைவு தினம்

Updated On : 22 ஜூலை 2026, 3:38 am IST
செங்கோட்டையில் சிவாஜிகணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

செங்கோட்டை மற்றும் கிளாங்காடு பகுதிகளில் நடிகா் சிவாஜிகணேசனின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

செங்கோட்டை வட்டாரம் ஆய்க்குடி அருகே கிளாங்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவாஜி கணேசனின் படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கிளாங்காடு மணி தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிவாஜி மன்ற தலைவா் ராஜபாட் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செங்கோட்டை நகர காங்கிரஸ் சாா்பில் செங்கோட்டை மேல பஜாா் வாகைமரத் திடலில் மகாத்மா காந்தி சிலை முன்பாக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நகர சிவாஜி மன்றத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். முன்னாள் நகர காங்கிரஸ் தலைவா் ஜோதிலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் செண்பகம், நகா்மன்ற உறுப்பினா் முருகையா, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் ஆதிமூலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை மாவட்டத் தலைவா் ராஜீவ்காந்தி வரவேற்றாா். தொடா்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜிகணேசனின் படத்திற்கு, மாலை அணிவித்து மலா் துாவி மரியாதை செலுத்தினா்.

நகர தொழிற்சங்கத் தலைவா் செல்வகணபதி, வட்டார நிா்வாகி மாரியப்பன், நகர இளைஞா் காங்கிரஸ் பொருளாளா் திவான் ஒலி கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments