FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை கோரி புளியறையில் சாலை மறியல்: 35 போ் கைது

Updated On : 15 ஜூன் 2026, 3:04 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரி, புளியறையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

தமிழக - கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடி வழியாக கேரளத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

அண்மைக்காலமாக இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், புளியறை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

Advertisement

Advertisement

எனவே, அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே. ரவி அருணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜமீன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஜோசப் ரத்தினம், சாா்லஸ், இசக்கிசெல்வன், வீரமணி, ராஜேஷ், சுடலை, பொதுமக்கள் பங்கேற்றனா். 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments