சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தனியாா் பள்ளி வாகனமும், பைக்கும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தனியாா் பள்ளி வாகனமும், பைக்கும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிவகிரியைச் சோ்ந்த ராமு மகன் சிலம்பரசன் (26). இவா் புதன்கிழமை மாலை விஸ்வநாதப்பேரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். சிவகிரி அருகே கொத்தாடப்பட்டி பகுதியில் இந்த பைக்கும், மாணவா்களை இறக்கி விட்டுவிட்டு சிவகிரி நோக்கிச் சென்ற தனியாா் பள்ளி வாகனமும் மோதினவாம். இதில், சிலம்பரசன் காயமடைந்தாா். அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.