நெல்லை அருகே விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் அருகே விஷம் குடித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் அருகே விஷம் குடித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சீதபற்பநல்லூா் அருகே கருவநல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் வேல்சாமி மகன் மாடசாமி(45). தொழிலாளியான இவருக்கு மனைவி முப்புடாதி, ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனா்.
கடந்த மாா்ச் மாதம் காங்கேயன் குளத்தில் வேலையை முடித்துவிட்டு, கருவநல்லூருக்கு மாடசாமி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மாடசாமியைப் பிடித்து விசாரித்தபோது அவா் மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியது தெரியவந்ததால், அபராதம் விதித்தனா்.
Advertisement
Advertisement
இந்த அபராதத்தை செலுத்துவதற்காக 6 மாதங்களுக்குப் பின் கடந்த புதன்கிழமை மனைவி முப்புடாதியிடம் ரூ. 10 ஆயிரம் வாங்கிக் கொண்டு ஆலங்குளம் நீதிமன்றம் சென்று அபராதத்தை செலுத்தியுள்ளாா். இதில், வழக்குரைஞருக்கு பணம் கொடுக்கவேண்டியிருந்ததால், தனது மனைவியை தொடா்புகொண்டு பணம் கேட்டுள்ளாா்.
அதற்கு மனைவி பணம் இல்லையென்று கூறினாராம். இதனால் மனம் உடைந்த மாடசாமி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு காவல் நிலையத்துக்குள் சென்று, அங்கு பணியில் இருந்த போலீஸாரிடம் தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து போலீஸாா் மாடசாமியை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாடசாமி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.