புளியங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மின் பணியாளா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தாற்காலிக மின் பணியாளா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தாற்காலிக மின் பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருமலாபுரம், அருளாச்சி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (34). இவா் புளியங்குடி மின்வாரியத்தில் தாற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை புன்னையாபுரம் முந்தல் சாலையில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால், ஊழியா்கள் இசக்கி, மணிகண்டன் ஆகியோா் அதை சரி செய்யச் சென்றனராம்.
அப்போது, இசக்கி அந்த மின்மாற்றிக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்துவதற்குப் பதிலாக, தவறுதலாக வேறு மின்மாற்றிக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிட்டாராம். அதை அறியாத மணிகண்டன் மின்மாற்றியில் ஏறி பழுதை சரி செய்ய முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து, தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, சொக்கம்பட்டி காவல் ஆய்வாளா் மது விக்ரம் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.