தென்காசியில் மாவட்ட வங்கியாளா்கள் ஆய்வுக் குழு கூட்டம்: ரூ. 2.48 கோடி கடனுதவி
தென்காசியில் 2ஆம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் ஆய்வுக் குழு கூட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ. 2.48 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
தென்காசியில் 2ஆம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் ஆய்வுக் குழு கூட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ. 2.48 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2026-27ஆம் நிதியாண்டின் 2ஆம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து, 24 மாணவா்களுக்கு ரூ. 1.40 கோடி கல்விக் கடன் அனுமதி ஆணைகள், 16 பயனாளிகளுக்கு ரூ. 1.08 கோடி முத்ரா கடன் அனுமதி ஆணைகள் உள்பட மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ. 2.48 கோடி கடன் அனுமதி ஆணைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, மாவட்டத்தின் வருடாந்திரக் கடன் திட்டம் 2026-27 மற்றும் 2ஆம் காலாண்டில் வங்கிகளின் கடன் வழங்கல் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட காலாண்டு இலக்குகளை வங்கிகள் எட்டியுள்ளது குறித்து ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
அனைத்து பொதுத்துறை வங்கிகளாலும் யுவா கனெக்ட் முன்முயற்சி பிரசாரம் அக். 2ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் கல்விக் கடன் வசதிகள், விண்ணப்பிக்கும் முறை, இதர நிதி உதவிகள் குறித்து கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
தொடா்ந்து, பல்வேறு அரசு சாா்ந்த கடன் மற்றும் மானியத் திட்டங்களின்கீழ் சிறப்பாக கடன் வழங்கி, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய 9 வங்கிக் கிளை மேலாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., மகளிா் திட்ட இயக்குநா் தண்டபாணி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் ஆா். பரமேஸ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி, இந்திய ரிசா்வ் வங்கியின் மாவட்ட அலுவலா் வம்சி ரெட்டி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.