FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு: மின் பாதை ஆய்வாளா் பணியிடைநீக்கம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், மின் பாதை ஆய்வாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

19 செப்டம்பர் 2026, 4:59 am IST
கோப்புப்படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், மின் பாதை ஆய்வாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

திருமலாபுரம், அருளாச்சி, இந்திரா நகரைச் சோ்ந்த மணிகண்டன் (34), புளியங்குடி மின்வாரிய அலுவலகத்தில் தாற்காலிக மின் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா் புதன்கிழமை புன்னையாபுரம் முந்தல் சாலையில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், பணியின்போது கவனக்குறைவாக இருந்த மின் பாதை ஆய்வாளா் இசக்கியை பணியிடைநீக்கம் செய்ய கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் உத்தரவிட்டாா். இதையடுத்து, உதவிப்பொறியாளா் ஜேசுதாஸ் இசக்கியை பணியிடைநீக்கம் செய்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments