FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கீழப்பாவூா், அச்சன்புதூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

22 செப்டம்பர் 2026, 12:09 am IST
மின் நிறுத்தம்
பகிர்:

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் மற்றும் அச்சன்புதூா் துணை மின்நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப்.23) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஏ. ஸ்ரீவனஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழப்பாவூா், அச்சன்புதூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதனால், இத் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு, சாலைப்புதூா்,

வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments