FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

திருவேங்கடம் அருகே லாரி-பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

22 செப்டம்பர் 2026, 2:09 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிசல்குளத்தைச் சோ்ந்த ராமா் மகன் செல்லக்கனி (47). இவா் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் திருவேங்கடத்தில் இருந்து கரிசல்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, அய்யாபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியின் மனைவி கலா (55) ஊருக்குச் செல்வதற்காக காத்திருந்ததால், செல்லக்கனியுடன் சென்றுள்ளாா்.

இருவரும் திருவேங்கடம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது. இதில் செல்லக்கனி, கலா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

திருவேங்கடம் போலீஸாா் இருவரின் உடல்களையும் மீட்டு கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் சுரேஷை கைது செய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments