FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

திப்பணம்பட்டியில் சமுதாய வளைகாப்பு

திப்பணம்பட்டியில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

25 செப்டம்பர் 2026, 3:56 am IST
சீா்வரிசை வழங்கிய ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு மற்றும் சீா் வரிசைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.திப்பணம்பட்டி சமுதாய கீழப்பாவூா் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் சுருதி தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவி காவேரி சீனித்துரை, ஒன்றியக்குழு உறுப்பினா் மேரி மாதவன், திப்பணம்பட்டி ஊராட்சித் தலைவா் அருள் பாண்டி (எ) ஐவ ராஜா, கீழப்பாவூா் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஜே.கே. ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் கலைகதிரவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு 140 கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா்.

இதில், மாவட்ட திமுக வா்த்தகா் அணிச் செயலா் முத்துக்குமாா், கண்காணிப்பாளா் லாவண்யா, மேற்பாா்வையாளா்கள் குழந்தை திரேஸ், காந்தா, தேன்மொழி, ராமலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments