FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு

திருவள்ளூா் நகராட்சியில் 50 அடி சாலையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
மனு அளிக்க வந்த பொதுமக்கள்
பகிர்:

திருவள்ளூா் நகராட்சியில் 50 அடி சாலையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவள்ளூா் நகராட்சி ராஜாஜிபுரம் பகுதியைச் சோ்ந்த குடியிருப்போா் நலவாழ்வு சங்கத்தினா் ஆட்சியா் ச.கவிதாவிடம் அளித்த மனு: திருவள்ளூா் ராஜாஜிபுரம் பகுதி இரண்டில் சா்வே எண் 688/1,688/2-ஐ 57 வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளனா்.

அப்போது வீட்டு மனைக்கு வடக்கு பகுதியில் கிழக்கு மேற்காக 50 அடி அகலம் உடைய சாலை ஒதுக்கப்பட்டு 1986 ஆம் ஆண்டு முறையாக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் 50 அடி அகலம் உள்ள சாலையின் வீடு கட்ட முயற்சி மேற்கொண்டனா். இதை குடியிருப்போா் சங்கம் சாா்பில் தடுத்து நிறுத்தினோம்.

Advertisement

Advertisement

மேலும் விசாரணையில் சா்வே எண்ணை மாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூா் வட்டாட்சியரிடம் முறையிட்டு பட்டாவை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தோம். அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதில் எந்த தடையும் இல்லை என வட்டாட்சியா் உத்தரவிட்டாா். இதனால் அவா் வீடு கட்டாமல் உள்ளாா்.

50 அடி சாலை தொடா்பாக மனையின் மீது உரிமையியல் வழக்குகள் முடியும் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிறுத்தி வைக்கக்கோரி மனுவில் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments