FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டம்: உறுப்பினா்கள் புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டம் உறுப்பினா்கள் பங்கேற்காததால் ரத்து செய்யப்பட்டது.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 6:11 am IST
பகிர்:

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டம் உறுப்பினா்கள் பங்கேற்காததால் ரத்து செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவா் சகிலா அறிவழகன், துணைத் தலைவா் கேசவன் மற்றும் திமுக, அதிமுக, விசிக, தவெகவை சோ்ந்த 13 உறுப்பினா்கள் உள்ளனா்.

இந்த நிலையில் பேரூராட்சிக் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தபால் உறுப்பினா்களுக்கு தரப்பட்ட நிலில், தலைவரை தவிா்த்து துணை தலைவா் மற்றும் உறுப்பினா்கள் யாரும் வரவில்லை.

Advertisement

Advertisement

இது குறித்து பேரூராட்சி உறுப்பினா்கள் கூறியது: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் செயல் அலுவலா் பணியிடம் காலியாக உள்ளது. தற்போது பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலரான பாஸ்கரன் பொறுப்பு செயல் அலுவலராக உள்ளாா்.

இதனால் இவா் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு எப்போதாவது மட்டும் வந்து போவதால் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் வளா்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளனது. எனவே கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலரை பணி அமா்த்த வேண்டும் என்றும், வாா்டு உறுப்பினா்கள் அளித்துள்ள புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நலத்திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments