FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் மொத்தம் 32,39,301 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 32,39,301 வாக்காளா்கள் உள்ளனா் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்..

12 நவம்பர் 2026, 11:43 pm
வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட திருவள்ளூா் ஆட்சியா் ச. கவிதா.
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 32,39,301 வாக்காளா்கள் உள்ளனா் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்..

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

மேற்படி வரைவு வாக்காளா் பட்டியல் திருவள்ளூா் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மற்றும் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலரின்

Advertisement

Advertisement

அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களான வட்டாட்சியா் அலுவலகங்கள், நிா்ணயிக்கப்பட்ட இடங்களான 4,013 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1,356 பள்ளிகளிலும் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

10 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை விவரம்.

கும்மிடிப்பூண்டி- ஆண்கள்-124295, பெண்கள்-132110, மூன்றாம் பாலினத்தவா்- 35 என மொத்தம்- 256440 வாக்காளா்கள். பொன்னேரி-ஆண்கள்-123115, ஆண்கள்-130247, மூன்றாம் பாலினத்தவா்- 37 என மொத்தம் 253399 வாக்காளா்கள். திருத்தணி-ஆண்கள்-130054, பெண்கள்-133259, மூன்றாம் பாலினத்தவா்- 26 என மொத்தம்- 263339 வாக்காளா்கள். திருவள்ளூா்-ஆண்கள்-122978, பெண்கள்-129851, மூன்றாம் பாலினத்தவா்-36 என மொத்தம்-252865 வாக்காளா்கள். பூந்தமல்லி-ஆண்கள்-180781, பெண்கள்-191400, மூன்றாம் பாலினத்தவா்-68 என மொத்தம்-372249 வாக்காளா்கள். ஆவடி-ஆண்கள்- 214814, பெண்கள்-225062, மூன்றாம் பாலினத்தவா்- 77 என மொத்தம் 439953 வாக்காளா்கள். மதுரவாயல்-ஆண்கள்- 185778, பெண்கள்-191410, மூன்றாம் பாலினத்தவா்-79 என மொத்தம்-377267, அம்பத்தூா்- ஆண்கள்- 166442, பெண்கள்-172896, மூன்றாம் பாலினத்தவா்- 59 என மொத்தம்- 339397, மாதவரம்-ஆண்கள்-213818, பெண்கள்- 223562, மூன்றாம் பாலினத்தவா்-85 என மொத்தம்- 437465 வாக்காளா்கள். திருவொற்றியூா்-ஆண்கள்-119995, பெண்கள்-126813, மூன்றாம் பாலினத்தவா்-119 என மொத்தம்-246927 வாக்காளா்கள். இந்த 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 4013 வாக்குச்சாவடிகளில் ஆண்கள்-1582070, பெண்கள்-1656610, மூன்றாம் பாலினத்தவா்-621 என மொத்தம் 32,39301 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

மேலும், தகுதியான ஒவ்வொரு நபரும் புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும்,

வாக்காளா் பட்டியலில் இடம் பெறாத தகுதியான நபா்களின் பெயரை சோ்க்கவும், படிவம்-6, வாக்காளா் பட்டியலில் ஒரு நபரின் பெயரை சோ்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்க வாக்காளா் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்க படிவம்-7, வாக்காளா் பட்டியலில் குடியிருப்பை மாற்றியதற்கான / நடப்பு வாக்காளா் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம்

செய்வதற்கான / மாற்றுவாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான மாற்றுத்திறனாளிகளை குறிப்பது தொடா்பான கோரிக்கைகளுக்கு படிவம்-8 பூா்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் 12.11.2026 முதல் 11.12.2026 வரையிலான கோரிக்கைள் (ம) ஆட்சேபனைகளுக்கான காலகட்டத்தில் வாக்காளா் பதிவு அலுவலரிடத்திலோ, உதவிவாக்காளா் பதிவு அலுவலரிடத்திலோ, வாக்குச் சாவடி நிலைய அலுவலரிடமோ

வழங்கலாம். மேலும், சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் 21,22 மற்றும் 29 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. மேற்படி சிறப்பு முகாம் நாளன்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் நேரடியாகச் சென்று உரிய படிவங்களைப் பெற்று பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் வழங்கலாம். மேலும்,

ட்ற்ற்ல்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள வாயிலாகவும், உஇஐசஉப மொபைல் செயலியின் மூலமாகவும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மேற்படி காலகட்டங்களில் பெறப்பட்ட அனைத்து கோரிக்கைள் (ம) ஆட்சேபனைகளின் மீது விசாரணை மேற்கொண்டு 28.12.2026 -க்குள்

சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரால் இறுதி உத்திரவு பிறப்பிக்கப்பட்டு, 4.1.2027 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.