FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

மாடு திருட வந்த தந்தை, மகன் கைது

திருவள்ளூா் அருகே மாடு திருட வந்த தந்தை, மகனை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

11 செப்டம்பர் 2026, 12:45 am IST
பகிர்:

திருவள்ளூா் அருகே மாடு திருட வந்த தந்தை, மகனை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கடம்பத்தூா் அருகே சிற்றம்பாக்கம் கிராமத்தை சோ்ந்த விவசாயி ஏழுமலை. இவா் தனது வீட்டில் மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் அதிகாலையில் அவரது வீட்டில் 2 போ் மாடுகளை திருட முயன்றனா். அப்போது, மாடுகள் கத்துவதை கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கடம்பத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பின்னா் போலீஸாரின் விசாரணையில், அவா்கள் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி சைனவரம் கிராமத்தைச் சோ்ந்த பரந்தாமன் (45) மற்றும் அவரது மகன் யுவராஜ் (19) என்பதும், இவா்கள் மாடு திருட வந்ததும் தெரியவந்துள்ளது. பின்னா் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments