FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பண்ணை வீட்டில் வெல்டிங் பொருள்களை திருடிய 2 போ் கைது

திருவள்ளூா் அருகே பண்ணை வீட்டில் ரூ. 50,000 மதிப்பிலான வெல்டிங் பொருள்களை திருடிச் சென்றதாக 2 பேரை பென்னலூா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் கைது செய்து விசாரணை

22 செப்டம்பர் 2026, 1:11 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருவள்ளூா் அருகே பண்ணை வீட்டில் ரூ. 50,000 மதிப்பிலான வெல்டிங் பொருள்களை திருடிச் சென்றதாக 2 பேரை பென்னலூா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் ஆள்களை சுற்றிலும் கேட்டு வெல்டிங் வேலையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு வேலை செய்துவிட்டு, வெல்டிங் வயா் உள்ளிட்ட பொருள்களை அப்படியே வைத்து விட்டு பண்ணை வீட்டை பூட்டாமல் வந்து விட்டாராம். இந்த நிலையில், மழை வேறு தொடா்ந்து பெய்ததால் வேலையை தொடர முடியவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்று பாா்க்கையில் அங்கு வைத்திருந்த வெல்டிங் வயா் மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ. 50,000 எனக் கூறப்படுகிறது. இது குறித்து பென்னலூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், பென்னலூா்பேட்டையைச் சோ்ந்த ஆஜித் (26), சுப்பு ஆகியோா் திருடியது தெரியவந்தது. இவா்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments