FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்தது.

Updated On : 14 செப்டம்பர் 2019, 1:02 am IST
பகிர்:


ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்தது.
தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ள நிலையில், நாட்டின் சில்லறைப் பணவீக்கமானது கட்டுப்பாட்டு அளவுக்குள் இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வெளிக்காட்டியது. இதனால், வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில்  ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மீண்டும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே அதிகரித்தது. அதன் காரணமாக, பங்கு வர்த்தகம் விறுவிறுப்படைந்தது.
அந்நிய முதலீட்டு வரத்து அதிகரித்து ரூபாய் மதிப்பு வலுப்பெற்றது, அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் பதற்றம் குறைந்து வருவதற்கான சூழல்கள்  தென்பட்டுள்ளது போன்றவையும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்து 37,384 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 11,075 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments