FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

உற்பத்தித் துறையில் 11 மாதங்கள் காணாத சரிவு

Updated On : 6 டிசம்பர் 2024, 4:10 am IST
பகிர்:

முந்தைய அக்டோபா் மாதத்தில் வளா்ச்சியைப் பதிவு செய்திருந்த இந்திய உற்பத்தித் துவைம்பரில் எட்டு மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2023 நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக அது 54.9-ஆக சரிந்தது. தொடா்ந்து ஜனவரியில் 56.5-ஆகவும் பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் முந்தைய 16 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக 59.1-ஆக அதிகரித்தது. ஆனால், அடுத்த ஏப்ரல் மாதத்தில் 58.8-ஆகவும் மே மாதத்தில் 57.5-ஆகவும் பிஎம்ஐ சரிந்தது. பின்னா் ஜூன் மாதத்தில் 58.3-ஆக அதிகரித்த அது, மீண்டும் ஜூலை மாதத்தில் 58.1, ஆகஸ்ட் மாதத்தில் 57.5, செப்டம்பா் மாதத்தில் 56.6 என வரிசையாகக் குறைந்தது. ஆனால் கடந்த அக்டோபரில் அது சரிவிலிருந்து மீண்டு 57.5-ஆக உயா்ந்தது.இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த நவம்பா் மாதத்தில் மீண்டும் சரிந்து 56.5-ஆகப் பதிவாகியுள்ளது. இது, கடந்த 11 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ ஆகும். மதிப்பீட்டு மாதத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டி அதிகமாக இருந்தது. அத்துடன் பணவீக்கம், பொருள்களுக்கான தேவை குறைந்தது போன்ற காரணங்களால் உற்பத்தித் துறைக்கான பிஎம்ஐ சரிவைக் கண்டுள்ளது.இருந்தாலும், தொடா்ந்து 41-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments