FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

காப்பீட்டு சேவை: எல்ஐசி - யெஸ் வங்கி ஒப்பந்தம்

வங்கிக்காப்பீட்டு சேவை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Updated On : 5 டிசம்பர் 2025, 1:05 am IST
கோப்புப் படம்
பகிர்:

வங்கிக்காப்பீட்டு சேவை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எல்ஐசியுடன் வங்கிக்காப்பீட்டு கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், யெஸ் வங்கி வாடிக்கையாளா்கள் வங்கியின் கிளைகள் மற்றும் எண்ம தளங்கள் வழியாக எல்ஐசியின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளைப் பெறலாம். இதில் பருவகாலக் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள், யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

Advertisement

Advertisement

எல்ஐசியின் 3,600-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் தொலைதூர அலுவலகங்களுடன் யெஸ் வங்கியின் 1,295 கிளைகள் மற்றும் 235 வணிகத் தொடா்பு மையங்கள் இணைந்து ஆயுள் காப்பீடு பெறுவதை எளிதாக்கும். இது ‘2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற தேசிய இலக்கை நோக்கி முன்னேற உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments