முகப்பு
வணிகம்

எச்டிஎஃப்சி-யின் கடன் வட்டி குறைப்பு

Updated On : 19 ஜூன் 2025, 6:30 am IST
பகிர்:

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி, தனது நிதி செலவு அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்களை (எம்சிஎல்ஆா்) 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.

இது குறித்து வங்கியின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்து பருவகால எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் 10 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

புதிய விகிதங்கள் ஜூன் 7 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, ஒரு மாத பருவகாலம் வரை கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 8.90 சதவீதமாகக் குறைந்துள்ளது. மூன்று மாத கடன் வட்டி விகிதம் 8.95 சதவீதமாகவும், ஆறு மாத மற்றும் ஓா் ஆண்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 9.05 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு கால கடன்களுக்கான வட்டி விகிதம் 9.20 சதவீதத்தில் இருந்து 9.10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று வங்கியின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.