FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

6500mAh பேட்டரி திறன்... மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான எட்ஜ் 70 ப்ரோ இந்திய சந்தையில் இன்று (ஏப். 22) அறிமுகமாகவுள்ளது.

Updated On : 22 ஏப்ரல் 2026, 4:37 pm IST
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ - படம் / நன்றி - மோட்டோரோலா
பகிர்:

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான எட்ஜ் 70 ப்ரோ இந்திய சந்தையில் இன்று (ஏப். 22) அறிமுகமாகவுள்ளது.

அதீத பேட்டரி திறன் மற்றும் கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சோனி நிறுவனத்தின் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த வரவேற்பு உள்ளது. அந்தவகையில் தற்போது புதிதாக எட்ஜ் 70 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

Advertisement

8GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 38,999

12GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 41,999.

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ சிறப்பம்சங்கள்

6.8 அங்குல அமோலிட் திரை உடையது.

திரை சுமூகமாக இயங்கும் வகையில்144Hz திறன் உடையது.

திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 5200 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

திரை எளிதில் உடையாத வகையில் கொரில்லா கிளாஸ் உடையது.

கேமரா பிரியர்களைக் கவரும் வகையில் பின்புறம் 50MP சோனி லென்ஸ் உடைய முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. நுணுக்கமான புகைப்படங்களுக்காக 50MP மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

6,500mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W திறன் உடையது.

வெள்ளை, நீலம், சாம்பல் ஆகிய 3 நிறங்களில் கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments