FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ராம்கோ சிமெண்ட்ஸின் முதல் காலாண்டு லாபம் 63% சரிவு!

ராம்கோ சிமெண்ட்ஸ் ஒருங்கிணைந்த நிகர லாபம் 63.05 சதவீதம் சரிந்து ரூ. 31.24 கோடியாக உள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 8:32 pm IST
ராம்கோ சிமெண்ட்ஸ்
பகிர்:

புதுதில்லி: மேற்கு ஆசியவில் நிலவும் நெருக்கடியால், எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் விற்பனை வருவாய் சரிவு ஆகியவற்றின் காரணமாக, 2026-27 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 63.05 சதவீதம் சரிந்து ரூ. 31.24 கோடியாக உள்ளது.

2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 84.56 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. இக்காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் 9.6 சதவீதம் அதிகரித்து ரூ. 2,273.05 கோடியாக இருந்தது.

மேற்கு ஆசியப் போர் காரணமாக எரிபொருள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை வருவாய் 5 சதவீதம் சரிவு ஆகியவற்றால், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனளிப்புக்கு முந்தைய வருவாய் ரூ. 314 கோடியாக இருந்தது. இதுவே 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டிலிருந்த ரூ. 404 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீத சரிவாகும்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களால், தேவை சார்ந்த இடையூறுகள் இருந்தபோதிலும், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் சிமெண்ட் விற்பனை 12 சதவீதம் அதிகரித்து 4.48 மில்லியன் டன்னாக இருந்தது. இதன் விளைவாக, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் சிமெண்ட் உற்பத்தித் திறன் பயன்பாடு 70 சதவீதமாக இருந்தது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 68 சதவீதமாக இருந்தது.

அதேபோல, கட்டுமான வணிகத்தில், 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 1.20 லட்சம் டன்னாக இருந்த விற்பனை அளவு, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.35 லட்சம் டன்னாக உயர்ந்து 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதே வேளையில், ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் 14.5 சதவீதம் அதிகரித்து ரூ. 2,252.02 கோடியாக உள்ள நிலையில், ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 9.6 சதவீதம் அதிகரித்து ரூ. 2,279.79 கோடியாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில், 'தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் பங்குகள், 0.54 சதவீதம் சரிந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 931.60 என்ற நிலையில் நிறைவடைந்தன.

summary

The Ramco Cements reported 63.05 per cent decline in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments