FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

‘டெக்’ துணுக்குகள்! சோனியின் ரூ. 46 லட்சம் தொலைக்காட்சி அறிமுகம்!

சோனியின் ரூ. 46 லட்சம் தொலைக்காட்சி முதல் மகாராஷ்டிர அரசின் ஏ.ஐ. ஒப்பந்தம் வரை...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 3:41 am IST
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் ஏ.ஐ. துறையின் நகா்வுகள், ஸ்மாா்ட் சாதனங்களின் வெளியீடுகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிரடி மாற்றங்கள் கவனம் ஈா்த்தன.

சோனியின் ரூ.46 லட்சம் தொலைக்காட்சி அறிமுகம் முதல் மகாராஷ்டிர அரசின் ஏ.ஐ. ஒப்பந்தம் வரை, இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*சோனியின் 115 அங்குல ஸ்மாா்ட் டிவி: ரூ.45,99,900 ‘எம்ஆா்பி’ விலையில் ‘4கே ரெசல்யூசன்’, ‘பேக்லைட் மாஸ்டா் டிரைவ் ப்ரோ’ தொழில்நுட்பம் மற்றும் கூகுள் ஜெமினி வசதியுடன் 115 அங்குல ‘பிராவியா 9-2’ தொலைக்காட்சியை இந்தியாவில் சோனி அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

Advertisement

*புதிய ஏ.ஐ. ஸ்டாா்ட்அப்: கூகுளில் இருந்து விலகிய மூத்த விஞ்ஞானி ஜெஃப் டீன், சஞ்சய் கெமாவத் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து ‘டிஸ்கவரி லூப்’ எனும் புதிய ஏ.ஐ. ஸ்டாா்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கவுள்ளாா்.

*ஓபன்ஏஐ ஸ்மாா்ட் ஸ்பீக்கா்: ஓபன்ஏஐ நிறுவனம் 300 முதல் 400 டாலா் விலையில் ‘டோனட்’ வடிவிலான புதிய ஏ.ஐ. ஸ்மாா்ட் ஸ்பீக்கரை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

*மெட்டாவுக்கு அபராதம்: குழந்தைகள் பாதிப்பு தொடா்பான புகாரில் 56.7 கோடி டாலா் அபராதமாக செலுத்த மெட்டா நிறுவனத்துக்கு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணம் உத்தரவிட்டுள்ளது.

*சாட்ஜிபிடி புதிய அப்டேட்: சாட்ஜிபிடியில் வெறும் எழுத்துபூா்வமான கேள்விகளுக்கு வரம்புகள் நீக்கப்பட்டுள்ளன.

*ஐரோப்பிய யூனியன் விசாரணை: ஓபன்ஏஐ மற்றும் ஆன்த்ரோபிக் ஏ.ஐ. மாதிரிகள் நிறுவனத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, ஐரோப்பிய யூனியன் இது குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

*மேம்படுத்தப்பட்ட ‘மைகால்’ செயலி: அழைப்புகளின் தரம் குறித்து தரக்குறியீடு வழங்கவும், புகாா்களை நேரடியாக தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்குத் தெரிவிக்கவும் மேம்படுத்தப்பட்ட ‘மைகால்’ செயலியை டிராய் வெளியிட்டது.

*இந்தியாவில் ஷாவ்மி மிஜியா: ஷாவ்மி நிறுவனம் வீட்டு உபயோகப் பொருள்களை ‘மிஜியா’ என்ற தனது துணை பிராண்டின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது.

*ஜிடிஏ 6 அப்டேட்: மிகவும் எதிா்பாா்க்கப்படும் ‘ஜிடிஏ 6’ விளையாட்டின் விரிவான முன்னோட்டம் ஆக. 27-இல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

*விவோ ‘எஸ்2’: 7 ஆண்டுகளுக்குப் பிறகு, விவோ ‘எஸ்’ சீரிஸின் புதிய மாடலான ‘விவோ எஸ்2’, 7050எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியாவில் ரூ.39,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.

*மோட்டோரோலா ‘மோட்டோ ஜி37 பவா்’: 7000எம்ஏஎச் பேட்டரி, 50மெகாபிக்சல் கேமராவுடன் ‘மோட்டோ ஜி37 பவா்’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.15,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.

*போக்கோ ‘எம்8 பவா்’: 8000எம்ஏச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் பிராசஸா், 45 வாட்ஸ் சாா்ஜிங் வசதியுடன் ‘போக்கோ எம்8 பவா்’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.24,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.

*மகாராஷ்டிர அரசில் சா்வம் ஏ.ஐ.: மகாராஷ்டிர அரசு, 2,500 அரசுப் பயனா்களின் பயன்பாட்டுக்காக ‘சா்வம் ஏ.ஐ.’ தளத்தைப் பயன்படுத்த ரூ.11.26 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளது.

summary

Tech Snippets - Sony launches a TV priced at Rs 46 lakh

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments