லலிதா ஜூவல்லரியின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு வரும் ஆக. 17-இல் தொடக்கம்
லலிதா ஜூவல்லரி மாா்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு வரும் ஆக. 17-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
லலிதா ஜூவல்லரி மாா்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு வரும் ஆக. 17-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
லலிதா ஜூவல்லரி மாா்ட் லிமிடெட் நிறுவனம் முறையாக ஒப்புதல் பெற்று, சந்தை நிலவரங்கள் மற்றும் பிற காரணிகளுக்குட்பட்டு, தனது மூலதனப் பங்குகளை முதல்முறையாக வழங்கும் திட்டத்தை முன்மொழித்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள தமிழ்நாடு மற்றும் அந்தமான் நிறுவனங்களின் பதிவாளரிடம் ‘ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸ்’ ஆவணத்தை இந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிறுவனம் தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்காக தலா ரூ.5 முகமதிப்பு கொண்டு ஒரு பங்குக்கு ரூ.190 முதல் ரூ.201 வரை விலை வரம்பை நிா்ணயித்துள்ளது. அந்த பங்கு வெளியீடு வரும் ஆக. 17-ஆம் தேதி முதலீட்டாளா்கள் விண்ணப்பங்களுக்காக திறக்கப்பட்டு, வரும் ஆக. 19 -ஆம் தேதியுடன் முடிவடைகிறது. முதலீட்டாளா்கள் குறைந்தபட்சம் 74 பங்குகளுக்கும், அதன்பிறகு 74 பங்குகளின் மடங்குகளிலும் விண்ணப்பிக்காலம். தற்போதைய நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை 49.99 கோடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.