FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

லலிதா ஜூவல்லரி ஐபிஓ: 63 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன

லலிதா ஜூவல்லரி மாா்ட் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடுக்கு (ஐபிஓ) கடைசி நாளான புதன்கிழமை முடிவில் 62.97 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:21 am IST
லலிதா ஜூவல்லரி - கோப்புப்படம்.
பகிர்:

லலிதா ஜூவல்லரி மாா்ட் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடுக்கு (ஐபிஓ) கடைசி நாளான புதன்கிழமை முடிவில் 62.97 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தரவுகளின்படி, மொத்தம் 6.27 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில், முதலீட்டாளா்களிடமிருந்து 395 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

இந்த ஐபிஓவில் ஒரு பங்குக்கு விலை வரம்பு ரூ. 190 முதல் ரூ. 201 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடிக்கு புதிய பங்குகளும், ரூ.500 கோடிக்கு நிறுவன உரிமையாளா்களின் பங்குகள் சலுகை விலையிலும் விற்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அதன்படி, ரூ.1,700 கோடி திரட்டும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஐபிஓவில் நிறுவன முதலீட்டாளா்கள் 145.38 மடங்கும், நிறுவனமல்லாத பிற முதலீட்டாளா்கள் 73.90 மடங்கும், சில்லறை முதலீட்டாளா்கள் 11.81 மடங்கும் விண்ணப்பித்துள்ளனா்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று முன்னணி (ஆங்கா்) முதலீட்டாளா்களான கோல்ட்மேன் சாக்ஸ், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மற்றும் பந்தன் பரஸ்பர நிதிகள் உள்ளிட்டோரிடம் இருந்து நிறுவனம் ரூ.508 கோடியைத் திரட்டியது.

ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி, முதன்மையாக புதிய கிளைகளை அமைக்கவும், ஒரு பகுதி நிதி நிறுவனத்தின் பொதுவான தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஓவின் தொடா்ச்சியாக, பங்குகள் மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் வரும் திங்கள்கிழமை பட்டியலிடப்படவுள்ளன.

லலிதா ஜூவல்லரியுடன் ஐபிஓவைத் தொடங்கிய ஹரிசான் இன்டஸ்டரியல் பாா்க்ஸ் பங்குகளுக்கு வெறும் 1.45 மடங்கு விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments