FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 'மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட்' பங்குகள் 30% உயர்வு!!

உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான 'மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட்' அதன் வெளியீட்டு விலையான ரூ. 140 ஐ விட சுமார் 30 சதவீதம் கூடுதல் விலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 7:54 pm IST
மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட்
பகிர்:

புதுதில்லி: ரெடி-டு-ஈட் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான 'மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட்' பங்குகள், இன்று அதன் வெளியீட்டு விலையான ரூ. 140 ஐ விட சுமார் 30% கூடுதல் விலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மும்பை பங்குச் சந்தை மற்றும் நிஃப்டி-யில் அதன் வெளியீட்டு விலையை விட 17.85 சதவீதம் அதிகரித்து, இந்த பங்கு ரூ. 165க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கு 29.60 சதவீதம் உயர்ந்து ரூ. 181.45-க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தத நிலையில், நிஃப்டி-யில் இந்த பங்கு 29.64 சதவீதம் உயர்ந்து ரூ. 181.50 க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 13,968.81 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

'மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட்' ஐபிஓ வெளியீடு, பங்கு விற்பனையின் கடைசி நாளான வியாழக்கிழமையன்று 56.12 மடங்குக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ரூ. 1,553 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ, பங்கு ஒன்றுக்கு ரூ. 133 முதல் ரூ. 140 வரை என்ற விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

summary

Shares of packaged food company Milky Mist Dairy Food Ltd ended with a premium of nearly 30 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments