6- வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் கடும் சரிவு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன.
தொடர்ந்து 6- வது நாளாக இன்றும் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,418.97 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 314.61 புள்ளிகள் குறைந்து 77,413.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
Advertisement
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.10 புள்ளிகள் குறைந்து 24,225.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி மிட்கேப் 0.45 சதவீதம் சரிந்தும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.06 சதவீதம் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.
நிஃப்டி50 குறியீட்டில் இன்ஃபோசிஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், இன்ஃபோசிஸ், எச்.சி.எல். டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை முக்கியப் பின்தங்கிய நிறுவனங்களில் அடங்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, மாருதி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை லாபமடைந்து வருகின்றன.
துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ, மீடியா, உலோகம், பார்மா ஆகிய குறியீடுகள் உயர்ந்தும் ஐடி, ரியல் எஸ்டேட் உள்ளிட்டவை அதிகபட்சமாக சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 91.46 டாலர் என உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.66 ஆக உள்ளது.
Stock Market: Sensex drops 300 pts; nifty 24,225
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.