FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பட்டியலிட்ட நாளில் பிஹாரி லால் பங்குகள் 63% உயர்வு! சந்தையில் அமோக வரவேற்பு!!

பிஹாரி லால் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ. 285 ஐ விட 63 சதவீதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 9:53 pm IST
பிஹாரி லால் இன்ஜினியரிங் லிமிடெட்
பகிர்:

புதுதில்லி: இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி நிறுவனமான பிஹாரி லால் இன்ஜினியரிங் லிமிடெட்டின் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ. 285 ஐ விட 63 சதவீதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில், வெளியீட்டு விலையிலிருந்து 60.70 சதவீதம் உயர்ந்து, ரூ. 458 க்கு சந்தையில் அறிமுகமானது. அதே வேளையில், நிஃப்டி-யில் 63.15% பிரீமியத்துடன் ரூ. 465-க்கு பட்டியலிடப்பட்டது.

இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,135.22 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, பிஹாரி லால் இன்ஜினியரிங் லிமிடெட்டின் ஐபிஓ-விற்கான கடைசி நாளில், அதன் ஐபிஓ சுமார் 108.44 மடங்கு அதிக சந்தா பெறப்பட்டதாக தெரிவித்தது.

ரூ. 302 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ, பங்கு ஒன்றுக்கு ரூ. 271 முதல் ரூ. 285 வரை நிர்ணயிக்கப்பட்டது.

summary

Behari Lal Engineering Ltd listed with a massive premium of over 63 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments