ஐக்யூ இசட் 11 விற்பனை இன்று முதல் தொடக்கம்!
ஐக்யூ இசட் 11 ஸ்மார்ட்போன் இன்று முதல் (ஆக. 25) விற்பனையைத் தொடங்கியுள்ளது குறித்து...
ஐக்யூ இசட் 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் (ஆக. 25) விற்பனையாகி வருகிறது.
கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான நிலையில், இன்று நண்பகல் 12 மணி முதல் விற்பனை தொடங்கியுள்ளது. அமேசான் இணைய விற்பனை தளத்தில் ஐக்யூ இசட் 11 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
6GB உள்நினைவகம் (RAM) + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 34,999.
Advertisement
Advertisement
இதேபோன்று, 8GB RAM + 128GB, 8GB RAM + 256GB, மற்றும் 12GB RAM + 256GB ஆகியவற்றின் விலைகள் முறையே ரூ. 39,999, ரூ. 44,999, மற்றும் ரூ. 49,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சில வங்கிக் கடன் அட்டைகளுக்கு ரூ. 3500 முதல் ரூ. 4000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
ஐக்யூ இசட் 11 ஸ்மார்ட்போன் 6.74 அங்குல தொடுதிரை உடையது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120 ஹெர்ட்ஸ் திறன் கொண்டுள்ளது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1200 நிட்ஸ் திறன் வழங்கப்பட்டுள்ளது.
செயல்திறனுக்காக மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
128 ஜிபி மற்றும் 256 ஜிபி நினைவக வசதியுடன் 1 டிபி வரை மெமரி கார்டு மூலம் விரிவாக்கம் செய்ய முடியும்.
50 மெகா பிக்சல் சோனி லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி பிரியர்களுக்கான முன்புறம் 5 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்டிராய்டு 16 அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 6 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டு கைரேகை சென்சார், 200 சதவிகித அல்ட்ரா சவுண்ட் ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.
iQOO Z11 smart phone sales starts in india with great specification
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.