தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 35% அதிகரிப்பு!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வருவாய் அதிகரித்ததன் விளைவாக வங்கியின் நிகர லாபம் ரூ. 412 கோடியாக உயர்ந்துள்ளது.
புதுதில்லி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அதன் வருவாய் அதிகரித்ததன் விளைவாக வங்கியின் நிகர லாபம் 35% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், அதே வேளையில் வங்கியின் நிகர லாபம் ரூ. 412 கோடியாக உயர்ந்துள்ளது என்றது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ. 305 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ. 1,901 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ. 1,617 கோடியாக இருந்தது.
வங்கி ஈட்டிய வட்டி வருவாய் ரூ. 1,662 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இது ரூ. 1,386 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
வங்கியின் நிகர வட்டி வருவாய் 32 சதவீதம் அதிகரித்து ரூ. 765 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ. 580 கோடியாக இருந்தது.
ஆய்வுக்கு உள்பட்ட காலத்தில், வங்கியின் செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ. 412 கோடியிலிருந்து ரூ. 611 கோடியாக அதிகரித்தது. அதேபோல, வங்கியின் நிகர வாராக் கடன் அளவும் 0.33 சதவீதத்திலிருந்து 0.17 சதவீதமாகக் குறைந்தது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் வங்கி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் என்றார் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுகுமாரன்.
TMB on Monday reported a net profit to Rs 412 crore for the first quarter ended June 30.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.