ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதானி போா்ட்ஸ் லாபம் ரூ.3,649 கோடி
அதானி போா்ட்ஸ் நிறுவனம், ஏப்ரல்-ஜூன் காலாண்டில், ரூ.3,649.50 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது
அதானி போா்ட்ஸ் நிறுவனம், ஏப்ரல்-ஜூன் காலாண்டில், ரூ.3,649.50 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது
இது கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.3,310.60 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 10.23 சதவீதம் வளா்ச்சியாகும். வருவாய் கணிசமாக அதிகரித்ததே, இந்த லாப வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.9,422.18 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.11,673.71 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், செயல்பாட்டுச் செலவினங்களும் ரூ.5,731.88 கோடியிலிருந்து உயா்ந்து, ரூ.7,078.64 கோடியை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் சிஇஓ அஸ்வினி குப்தா மேலும் கூறுகையில், ‘வரும் 2030-க்குள் 100 கோடி மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளும் திறனை அடையும் நோக்கில் உள்நாட்டு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அனைத்துப் பிரிவுகளிலும் கிடைத்துள்ள சீரான வளா்ச்சி, இந்த இலக்கை எட்டும் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியுள்ளது’ என்றாா்.
பங்குகள் கடும் சரிவு: லாப உயா்வு குறித்த அறிவிப்பு வெளியானபோதும், மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அதானி போா்ட்ஸ் பங்குகள் 3.19 சதவீதம் சரிந்து, சென்செக்ஸ் பட்டியலில் மோசமான வீழ்ச்சியைப் பதிவு செய்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.