300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை!
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பல்வேறு காரணங்களால், தொடக்கத்தில் ஏற்பட்ட இழப்புகளை சமம் செய்த பிறகு உயர்ந்து வர்த்தகமானது.
மும்பை: இன்றைய வர்த்தகத்தில், முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பல்வேறு காரணங்களால், வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட இழப்புகளை சமம் செய்த பிறகு உயர்ந்து வர்த்தகமானது.
காலை 10:30 மணியளவில், சென்செக்ஸ் 150.50 புள்ளிகள் உயர்ந்து 76,160.20 புள்ளிகளாகவும், நிஃப்டி 51.45 புள்ளிகள் உயர்ந்து 23,965.15 புள்ளிகளாக வர்த்தகமானது. சுமார் 2,077 பங்குகள் விலை உயர்ந்தும் 1,305 பங்குகள் விலை சரிந்தும் 180 பங்குகள் எந்தவித மாற்றமின்றி இருந்தன.
நிஃப்டி 50 குறியீட்டில், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் சுமார் 4% உயர்ந்து அதிகபட்ச லாபம் ஈட்டிய பங்காகத் திகழ்ந்தது. என்டிபிசி மற்றும் எட்டர்னல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா சுமார் 2% உயர்ந்தன. டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் தலா 1% உயர்ந்தன.
Advertisement
Advertisement
கோல் இந்தியா நிறுவனத்தின் 2% வரையிலான பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்தன. நிஃப்டி 50 குறியீட்டில், பொதுத்துறை எரிசக்தி நிறுவனங்களான கோல் இந்தியா மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் நிறுவநத்தின் பங்குகள் அதிகபட்ச இழப்பைச் சந்தித்தன. இவை இன்று முறையே 4% மற்றும் 3% அதிகமாகவும் விலை குறைந்தன.
30 பங்குகளை கொண்ட சென்செக்ஸில் எச்.டி.எஃப்.சி. வங்கி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபோசிஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், ஆக்சிஸ் வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் என்டிபிசி, பவர் கிரிட், எட்டர்னல் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.4 முதல் 0.5% வரையிலும், மிட்கேப் குறியீடுகள் 0.3 முதல் 0.5% வரையிலும் உயர்ந்தன. துறைசார் குறியீடுகளில், நிஃப்டி மெட்டல் குறியீடு 3% உயர்ந்து அதிகபட்ச லாபம் ஈட்டிய குறியீடாக அமைந்தது. நிஃப்டி-யில் ஆயில் & கேஸ் குறியீடு 0.6% சரிந்தன.
நிஃப்டி 200 மற்றும் நிஃப்டி 500 குறியீடுகளிலும் கோல் இந்தியா நிறுவனமே அதிகபட்ச இழப்பைச் சந்தித்த பங்காக அமைந்தது. நிஃப்டி 200 குறியீட்டில், அதானி அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன.
நிஃப்டி 500 குறியீட்டில், ஜே.கே டயர் & இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுமார் 6 சதவீதம் உயர்ந்து, அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது. மார்ச் காலாண்டில் தனது நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 80 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்கு விலைகள் உயர்ந்தன.
ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு ஆகியவை ஏற்றத்துடன் வர்த்தகமாயின. அதே வேளையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் வர்த்தகமானது.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 2,407.87 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய், 1.56 சதவீதம் சரிந்து பேரல் ஒன்றுக்கு 98 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.