முகப்பு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிந்து ரூ. 92.44 ஆக நிறைவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது குறித்து...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிந்து ரூ. 92.44 ஆக நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு - சித்திரப் படம்
பகிர்:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் சரிந்து 92.44 ஆக நிறைவடைந்தது

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (நவ. 26) 24 காசுகள் சரிந்து, ரூ. 92.44 ஆக நிறைவடைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 92.50 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின்போது, ​​டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 92.31 முதல் 92.66 வரையில் ஏற்ற - இறக்கத்துடன் காணப்பட்டது.

Advertisement

Advertisement

இறுதியில், முந்தைய நாள் (நவ. 25) முடிவிலிருந்து 24 காசுகள் சரிந்து, 92.44 என்ற அளவில் ரூபாய் மதிப்பு இன்று நிறைவடைந்தது.

இன்றைய தேசிய பங்குச் சந்தையில், சென்செக்ஸ் 390.31 புள்ளிகள் (0.46%) உயர்ந்து 84,328.59 புள்ளிகளில் முடிவடைந்தது. இதேபோல், நிஃப்டி 65.25 புள்ளிகள் (0.25%) உயர்ந்து 25,884.50 புள்ளிகளை எட்டியது.

summary

Rupee weakens 24 paise to settle at 92.44 against US dollar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.