2- வது நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் லாபம்!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்று (நவ. 26) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
நேற்று சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் முடிந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தைகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,301.40 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பகல் 11.20 மணி நிலவரப்படி 450.90 புள்ளிகள் உயர்ந்து 84,380.85 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 103.20 புள்ளிகள் உயர்ந்து 25,911.55 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி50-ல் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகிய ஐடி நிறுவங்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் 100 , நிஃப்டி ஸ்மால்கேப் 100 முறையே 0.27 சதவீதம் மற்றும் 0.38 சதவீதம் உயர்ந்தன.
துறை வாரியாக, நிஃப்டி ஐடி அதிகபட்சமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டி எஃப்எம்சிஜி அதிகபட்சமாக சரிந்தது. அதேபோல மீடியா, ஆட்டோ பங்குகளும் சரிந்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட 17 பங்குகள் உயர்ந்தும் மற்ற நிறுவன பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.55 ஆக உள்ளது.
ஐடி பங்குகள் உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை வாங்கி வருவது, கச்சா எண்ணெய் விலை குறைவு, சர்வதேச சந்தைகளின் ஏற்றம் ஆகியவற்றால், சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்து வருகின்றன.