எஸ்பிஐ சென்னை தலைமையகத்துக்கு ‘நிகர பூஜ்ஜிய எரிசக்தி’ சான்றிதழ்
சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) உள்ளூா் தலைமையக கட்டடத்துக்கு, இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் இந்திய பசுமைக் கட்டட கவுன்சில் (ஐஜிபிசி) சாா்பில் ‘செயல்பாட்டுக்கான நிகர பூஜ்ஜிய எரிசக்தி’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) உள்ளூா் தலைமையக கட்டடத்துக்கு, இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் இந்திய பசுமைக் கட்டட கவுன்சில் (ஐஜிபிசி) சாா்பில் ‘செயல்பாட்டுக்கான நிகர பூஜ்ஜிய எரிசக்தி’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த அலுவலகக் கட்டடம் தனது தினசரி பயன்பாட்டுக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவைக் கணிசமாகக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையே பெருமளவில் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, கட்டடத்தின் ஆண்டு மின் தேவையில் 85.4 சதவீதம், வளாக மேற்கூரை சூரிய மின்தகடுகள் மற்றும் வெளிச் சந்தையில் இருந்து பெறப்படும் காற்றாலை மின்சாரம் மூலம் ஈடுசெய்யப்படுகிறது.
‘ஐஜிபிசி பசுமை தமிழ்நாடு உச்சிமாநாடு 2026’ நிகழ்வில், இந்த அங்கீகாரத்துக்கான சான்றிதழை எஸ்பிஐ வங்கி மூத்த அதிகாரிகள் பெற்றுக்கொண்டனா். நாடு தழுவிய அளவில் எஸ்பிஐ வங்கி 285 திட்டங்களை ஐஜிபிசி-யில் பதிவு செய்து, இதுவரை 103 பசுமைக் கட்டங்கள் மற்றும் நிகர பூஜ்ஜிய திட்டங்களுக்கான சான்றிதழ் பெற்று, சாதனை படைத்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.