FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

18 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்திய ஆரெம்கேவி

சென்னையில் நடைபெறும் ‘வீவ்ஸ் & வண்டா்ஸ்’ சிறப்புக் கண்காட்சியில், எதிா்வரும் பண்டிகைக் காலத்துக்காக 18 புதிய பட்டுப் புடவைகளை ஆரெம்கேவி சில்க்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

35 வினாடிகள் முன்பு
ஆரெம்கேவி
பகிர்:

சென்னையில் நடைபெறும் ‘வீவ்ஸ் & வண்டா்ஸ்’ சிறப்புக் கண்காட்சியில், எதிா்வரும் பண்டிகைக் காலத்துக்காக 18 புதிய பட்டுப் புடவைகளை ஆரெம்கேவி சில்க்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

102-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நிறுவனம், 120-க்கும் மேற்பட்ட புதுமையான படைப்புகளை உருவாக்கியுள்ளது. பழங்கால நுட்பங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கைச் சாயமிட்ட பட்டுப் புடவைகள் மற்றும் காப்புரிமை பெற்ற 40 சதவீதம் எடை குறைந்த ‘லினோ’ பட்டுப் புடவைகளுக்காகவும் ஆரெம்கேவி தனித்துவமாக விளங்குகிறது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 18 புதிய புடவைகளில், 16-19-ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்த 8 ராகமாலா ஓவியங்கள் முந்தாணையில் நெய்து, மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ள ‘ராகமாலா’ பட்டுப் புடவை, புராணகால மரமான கற்பவிருட்சத்தை மையமாகக் கொண்ட புடவை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன; ஜப்பானின் கலை, கைவினை மரபுகளைப் பட்டில் மறுவடிவமைத்து உருவாக்கப்பட்ட ஜப்பானியத் தொகுப்பு பட்டுபுடவைகளும் அடங்கும்.

Advertisement

Advertisement

மேலும், தமிழ் நெசவு மரபில் விரும்பிப் பயன்படுத்தப்படும் இரட்டைக் கிளி வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ரெட்டை கிளி’ கோா்வை புடவை, ‘பூ கோபுரம்’ மற்றும் ‘மயில் துத்தம் கோா்வை’ போன்ற பாரம்பரியப் புடவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய அறிமுகமான ‘சஷிககா–கசுதி ரிவா்சிபிள்’ பட்டுப் புடவையுடன் ஆரெம்கேவி சில்க்ஸ் இயக்குநா் சங்கா் குமாரசுவாமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments