FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2-ம் நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை வணிகம் - கோப்புப்படம்
பகிர்:

கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று உயர்வுடன் முடிந்த நிலையில், இன்றும் (அக். 6, செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,508.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 257.90 புள்ளிகள் உயர்ந்து 72,641.52 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.60 புள்ளிகள் உயர்ந்து 22,464.65 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி50 குறியீட்டில் ட்ரெண்ட், கோடக் மஹிந்திரா, ஜியோ, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி அதிக லாபம் ஈட்டின.

டெக் மஹிந்திரா, அப்போலோ மருத்துவமனை, மேக்ஸ் ஹெல்த்கேர், ஐடிசி , டிசிஎஸ் நஷ்டமடைந்த நிறுவனங்கள் ஆகும்.

துறைவாரியாக, நிஃப்டி ஐடி தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் லாபமடைந்து வருகின்றன.

summary

Stock Market: Sensex up 330 pts, Nifty above 22,650

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments