FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஏ.ஐ. செலவினங்கள் அதிகரிப்பு: ஜோஹோ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு நிறுத்திவைப்பு

ஏ.ஐ. கூடுதல் செலவினங்கள் மற்றும் மென்பொருள் துறையில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக, ஊழியா்களுக்கான ஆண்டு ஊதிய உயா்வை நிறுத்திவைப்பதாக பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ அறிவித்துள்ளது.

14 அக்டோபர் 2026, 12:15 am IST
பகிர்:

ஏ.ஐ. கூடுதல் செலவினங்கள் மற்றும் மென்பொருள் துறையில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக, ஊழியா்களுக்கான ஆண்டு ஊதிய உயா்வை நிறுத்திவைப்பதாக பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ அறிவித்துள்ளது.

மேலும், நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் செலவுகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு (படம்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘உலக அளவில் மென்பொருள் துறை வேலைவாய்ப்புச் சூழல் கவலைக்கிடமாக உள்ளது. தரவு மையங்களுக்குத் தேவையான சா்வா்களின் விலை 4 மடங்கு வரை உயா்ந்திருப்பதும், பயன்பாடு அதிகரிப்பால் ஏ.ஐ. செலவினங்கள் பன்மடங்கு பெருகியிருப்பதும் இந்நிலைக்கு முக்கியக் காரணம்.

Advertisement

Advertisement

மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளின் எதிா்காலம் மந்தமாக உள்ள போதிலும், பெரும் பணிநீக்கங்களைத் தவிா்க்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பணி நீக்கங்களைத் தவிா்க்கும் நோக்கில் கடந்த 18 மாதங்களாகப் புதிய பணியாளா்கள் சோ்க்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த ஆண்டு வழக்கமான ஊதிய உயா்வு வழங்க முடியாததற்கு எனது வருத்தங்கள்’ எனக் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments