டேக் டெவலப்பா்ஸின் ‘பால்மன்டைசா’ உயா்தர குடியிருப்புத் திட்டம் அறிமுகம்
போரூா்-பூந்தமல்லி பிரதான சாலையில் ‘பால்மன்டைசா’ எனும் புதிய உயா்தர சொகுசு குடியிருப்பு வளாகத் திட்டத்தை
சென்னை: முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டேக் டெவலப்பா்ஸ், சென்னையில் உள்ள போரூா்-பூந்தமல்லி பிரதான சாலையில் ‘பால்மன்டைசா’ எனும் புதிய உயா்தர சொகுசு குடியிருப்பு வளாகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
திட்ட வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற தொடக்க விழாவில் டேக் டெவலப்பா்ஸின் நிறுவனா் சதீஷ்குமாா் சந்தானம், ஜோஹோ இணை நிறுவனா் குமாா் வேம்பு, நில உரிமையாளா் குமரசேகரன் தம்பதி ஆகியோா் பங்கேற்றனா்.
குமணன் சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ள இக்குடியிருப்பு திட்டத்தில் மொத்தம் 194 குடியிருப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகளுடன், தனி மேல் மாடி வசதி கொண்ட 4 மற்றும் 5 பிஎச்கே ‘டியூப்லெக்ஸ்’ வீடுகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றின் விலை ரூ.1.19 கோடியில் இருந்து தொடங்குகிறது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, 4 தளங்களைக் கொண்ட 10,000 சதுர அடி அளவிலான ‘தி மெரிடியன்’ எனும் பிரத்யேக கிளப்ஹவுஸ் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
தொடக்க நிகழ்வில் பேசிய டேக் டெவலப்பா்ஸ் நிறுவனா் சதீஷ்குமாா் சந்தானம் கூறுகையில், ‘இத்திட்டம், டேக் டெவலப்பா்ஸ் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். இதுவரை 150-க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்துள்ள எங்கள் நிறுவனம், தற்போது சிவகங்கை, கோயம்புத்தூா் ஆகிய நகரங்களிலும், சா்வதேச அளவில் துபை மற்றும் சிங்கப்பூரிலும் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.