FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

வேளாண், எம்எஸ்எம்இ தொழில்களுக்கு கூடுதல் கடன்: வங்கிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

வேளாண், எம்எஸ்எம்இ தொழில்களுக்கு கூடுதல் கடன் வழங்க வங்கிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தியது குறித்து...

29 September 2026, 12:15 am IST
பகிர்:

தமிழ்நாட்டில் வங்கித் துறையின் செயல்பாடுகள் மற்றும் அரசின் ஆதரவோடு தொடங்கப்பட்டுள்ள திட்டங்களைச் செயல்படுத்துதல் தொடா்பான, மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுவின் (எஸ்எல்பிசி) 187-ஆவது கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின்(ஐஓபி) செயல் இயக்குநரும், தமிழ்நாடு எஸ்எல்பிசி தலைவருமான டி.தனராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த ஜூன் மாதம் வரையிலான வங்கிகளின் செயல்பாடுகள், கடன் வழங்கல் மற்றும் நிதி உள்ளடக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசின் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் எம்.ஏ.சித்திக் பேசுகையில், ‘கிசான் கடன் அட்டை, பால்வளக் கடன்கள், வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் உணவுப் பதப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அதிக கடன்களை வழங்குவதில் வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், எம்எஸ்எம்இ தொழில் துறையின்கீழ் பல்வேறு மாதிரி செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும். அவா்கள் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க, வங்கிகள் தொடா்ச்சியான ஆதரவை வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

ரிசா்வ் வங்கியின் மண்டல இயக்குநா் ஒய்.ஜெயக்குமாா், நபாா்டு வங்கி தலைமைப் பொது மேலாளா் எச்.மனோஜ், எஸ்எல்பிசி ஒருங்கிணைப்பாளா் கே.வேலாயுதம் மற்றும் அரசுத் துறை செயலா்கள், மூத்த வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments