FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குதிரைவாலி காய்கறி சாதம்

6 ஆகஸ்ட் 2025, 5:46 pm IST
பகிர்:

தேவையானவை:
குதிரைவாலி அரிசி - 1 கிண்ணம்
புதினா இலைகள் - சிறிது
தேங்காய் - 1 மூடி
வெங்காயம்(பெரியது) - 1
காய்கறிகள் : கேரட், பீன்ஸ், குடைமிளகாய், நாட்டு மக்கா சோளம், பச்சைப்பட்டாணி - அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் - சிறிது
ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா 2
வெண்ணை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை: காய்கறிகளைக் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை இடித்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் வெண்ணெய்யை விட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் 2 கீறிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, புதினா போட்டு வதக்கி  காய்கறிகள், உப்பு, மஞ்சள் சேர்த்து தேங்காய்ப் பால் 2 டம்ளர் ஊற்றி வேக விடவும்.

இந்தக் கலவை கொதித்ததும் குதிரைவாலி அரிசியை போட்டு வெந்ததும் இறக்கவும். குதிரைவாலி காய்கறி சாதம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments