ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரிய மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...
ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி மூலனூர் கார்த்திக் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுச் செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், மனுதாரரை ஏற்கெனவே, 4 நாள்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர், ஆனால், எதுவும் பறிமுதல் செய்யவில்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
Advertisement
Advertisement
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பேரம் பேசி எம்எல்ஏ-வை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, காவல்துறை தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Madras High Court questions in the TASMAC case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.