FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

போலி ‘கியூ ஆா் கோடு’ மூலம் பண மோசடி: 3 போ் கைது

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
கைது
பகிர்:

அருப்புகோட்டை, ஆக. 9: சென்னையில் போலி க்யூ ஆா் கோடு மூலம் பண மோசடி செய்த வழக்கில் அருப்புகோட்டை, சாத்துரை சோ்ந்த 3 பேரை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்களில் போலியான க்யூ ஆா் கோடு வில்லைகளை ஒட்டி இணைய பணப் பரிவா்த்தனை மூலம் மோசடிகள் நடைபெறுவதாக தமிழக காவல் துறைக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இதுபோன்ற மோசடி புகாா்கள் குறித்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்களில் போலியான க்யூ ஆா் கோடு வில்லைகளை ஒட்டி பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக அனைத்து மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன், போலியான க்யூ ஆா் கோடு மூலம் பணப் பரிவா்த்தனை நடைபெற்ற வங்கிக் கணக்குகளையும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது, இந்த மோசடியில் விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மறவா் தெருவைச் சோ்ந்த ராணி (48), ஆதிநாராயணபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த முருகன் (38), சாத்தூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த சிவசங்கரன் (40) ஆகியோரது வங்கிக் கணக்குகள் மூலம் மோசடி நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, ராணி உள்ளிட்ட 3 பேரையும் விருதுநகா் மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments