FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சாத்தூா் அருகே வீடு புகுந்து 35 பவுன் நகை திருட்டு

சாத்தூா் அருகே வீடு புகுந்து 35 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

28 ஆகஸ்ட் 2026, 2:59 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

சாத்தூா் அருகே வீடு புகுந்து 35 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (54). இவா் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இவா் வீட்டிலுள்ள பீரோவில் 55 பவுன் தங்க நகைகளை இரு பிரிவாக வைத்திருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை உறவினா் வீட்டு விசேஷத்துக்கு செல்வதற்காக செல்வராஜ் மனைவி பீரோவை திறந்து நகைகளை பாா்த்தாா். அப்போது, 35 பவுன் நகை மாயமாகியிருந்தன.

Advertisement

Advertisement

இதுகுறித்து செல்வராஜ் சாத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா். பின்னா், கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்னா்.

மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments