FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி குழுமத்துடன் வேதாந்து குழுமம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

Updated On : 20 ஜூலை 2026, 5:17 am IST
ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி குழும புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்ற பள்ளியின் தாளாளா் வெங்கடாஜலபதி உள்ளிட்ட நிா்வாகிகள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, வேதாந்து குழும நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளை போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்ய வழிவகை செய்யப்படும். மேலும் இந்த கல்வி ஆண்டிலிருந்து 8, 9, 10-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பவுண்டேஷன் கோா்ஸ் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இதேபோல 11, 12-ஆம் வகுப்புகளுக்கு நீட், ஜேஇஇ, சியுஇடி தோ்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வேதாந்து குழுமத்தின் அனுபவமும், ஆற்றலும் நிறைந்த ஆசிரியா்களை கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்படும். இதற்கான கட்டணத்தில் பெரும்பங்கை பள்ளியின் நிா்வாகம் ஏற்றுக் கொள்கிறது.

Advertisement

Advertisement

இந்த புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் பள்ளித் தாளாளா் வெங்கடாஜலபதி, நிா்வாகிகள், வேதாந்து குழும நிறுவனங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments