FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போக்சோ தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

Updated On : 22 ஜூலை 2026, 3:44 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 50 வயது பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, தனது வீட்டில் தனியறையில் வசித்து வந்தாா். வீட்டுக்கு பின்புறம் உள்ள வீட்டில் இவரது பெற்றோா் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், முத்துசாமிபுரம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த முனியசாமி (29) அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனியசாமியை கைது செய்தனா். இவா் மீது ஏற்கெனவே 5 வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments