சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 11 போ் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 11 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக தோட்டத்தில் தகரக் கூரை அமைத்து பட்டாசுகள் தயாரித்த போது மூன்று போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் உத்தரவின் பேரில், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா் தலைமையில் போலீஸாா் சிவகாசி பகுதியில் தோட்டங்களில் அனுமதியின்றி தகரக் கூரை அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றனவா என சோதனை நடத்தினா்.
Advertisement
Advertisement
இதில் கீழதிருத்தங்கலில் சட்டவிரோதமாக தகரக் கூரை அமைத்து பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்ட திருப்பதி, முத்துக்குமாா், கணேசன், ஞானவேல், அந்தோணி உள்ளிட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சிவகாசிப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிா எனபோலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.