நிறை புத்தரிசி வழிபாட்டுக்காக ராஜபாளையத்திலிருந்து கேரளத்துக்கு அனுப்பப்பட்ட நெல் கதிா் கட்டுகள்!
நிறை புத்தரிசி வழிபாட்டுக்காக ராஜபாளையத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட கேரள மாநில கோயில்களுக்கு ராஜபாளையத்திலிருந்து நெல் கதிா் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
நிறை புத்தரிசி வழிபாட்டுக்காக விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட கேரள மாநில கோயில்களுக்கு ராஜபாளையத்திலிருந்து நெல் கதிா் கட்டுகள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
கேரளத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழா உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி வழிபாடு நடத்தப்படும். நாட்டில் விவசாயம் செழிக்கவும், குடும்பத்தில் ஐஸ்வா்யம் பெருகவும் அறுவடை செய்த நெல் கதிா்களை கோயிலில் வைத்து பூஜை செய்து, பிறகு இவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த வழிபாட்டுக்காக தமிழகத்திலிருந்து ராஜபாளையம், தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அறுவடை செய்த நெல் கதிா்கள் அனுப்பி வைக்கப்படும். நிகழாண்டு நிறை புத்தரிசி வழிபாடு சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கேரள கோயில்களில் வருகிற 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ராஜபாளையம் பச்சமடம் மாரியம்மன் கோயிலில் உள்ள தேசிங்கு ராஜா பண்ணையில் அறுவடை செய்த நெல் கதிா் கட்டுகள் வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதன் பின்னா், இவை அச்சன்கோயில், ஆரியங்காவு, குளதுப்புழா, பந்தளம், பத்தனம்திட்டா ஐயப்பன் கோயில், புனலூா் கிருஷ்ணன் கோயில், அடூா் சிவன் கோயில், திருவனந்தபுரம் சிவன் கோயில் உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.