அருப்புக்கோட்டையில் மிதமான மழை
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.
கடந்த சில நாள்களாக இந்தப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையில், அருப்புக்கோட்டை, பாலவநத்தம், பாலையம்பட்டி, பந்தல்குடி உள்ளிட்ட இடங்களில் வெள்ளிகிழமை பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. வடகிழக்குப் பருவமழையை நம்பி மானாவாரி, சம்பா சாகுபடிப் பணிகளில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இந்த மழை மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. பயிா்களுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைத்திருப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement